News Just In

6/10/2023 09:52:00 PM

கதிர்காம யாத்திரிகர்களுக்கான அன்னதான பணிகளை முன்னெடுப்பதற்காக மாநகர சபையின் தொண்டர்கள் நாவலடி நோக்கி பயணம்.




Jana Ezhil
கதிர்காமத்திற்கு பாத யாத்திரை செல்கின்ற பக்தர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாநகர சபையின் ஒழுங்கமைப்பில் வர்த்தகர்கள் மற்றும் கொடைவள்ளல்களின் நிதி அணுசரணையில் முன்னெடுக்கப்படவுள்ள அன்னதான நிகழ்வுப் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் மாநகர சபையின் தொண்டர்கள் இன்று (10) மாலை தமது பயணத்தினை ஆரம்பித்தனர்.

வரலாற்று புகழ்மிக்க கதிர்காமத்திற்கு, வனப் பாதை வழியாக பாத யாத்திரை செல்கின்ற பக்தர்களின் நன்மை கருதி "கதிர்காம பாதயாத்திரைக்கான மட்டக்களப்பு மாநகர சபையின் அன்னதான மகா சபை" யின் ஒழுங்கமைப்பில் வர்த்தகர்கள் மற்றும் கொடைவள்ளல்களின் நிதி அணுசரணையில் கடந்த வருடம் தொடக்கம் குமுக்கன் ஆற்றுக்கு அப்பால் கதிர்காம வனப் பாதையில் அமைந்துள்ள நாவலடி பிரதேசத்தில் அன்னதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, இவ்வருடமும் ஜூன் 13 ஆம் திகதி முதல் ஜூன் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாத யாத்திரிகர்களுக்கான அன்னதான திருப்பணிகளை மேற்படி அன்னதான மகா சபையினர் முன்னெடுக்கவுள்ளனர்.

அத்துடன் யாத்திரிகர்களுக்கான குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குமுக்கன் ஆற்றுக்கு அப்பால் குடிநீர் விநியோக பணியினையும் இக்குழுவினர் தொடரவுள்ளனர்.

இம்முறை பாத யாத்திரிகர்களுக்காக ஜூன் 12 ஆம் திகதி திறக்கப்படவுள்ள காட்டு வழிப்ப் பாதையானது எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி மூடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.











No comments: