News Just In

6/10/2023 02:38:00 PM

கிழக்குமாகாண விவசாய நிறுவனங்களுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்கள் ஆளுநரால் கையளிப்பு!




22 விவசாய நிறுவனங்களுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்களை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இன்று இடம் பெற்றது.

இந்நிகழ்வில் வர்த்தக இராஜங்க அமைச்சர் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல, மாகாண பிரதம செயலாளர் மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் நிலைபேண்தகு விவசாய அபிவிருத்தி வேலை திட்டத்தின் கீழ் செயல்பட்ட 22 விவசாய நிறுவனங்களுக்கே உழவு இயந்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன

No comments: