News Just In

6/11/2023 07:11:00 PM

மட்டக்களப்பில் விவசாய உற்பத்தியில் வெளிநாட்டு நிதிகளை சேகரிக்க விவசாய அமைச்சு துரித நடவடிக்கை

மட்டக்களப்பில் விவசாய உற்பத்தியில் வெளிநாட்டு நிதிகளை சேகரிக்க விவசாய அமைச்சு துரித நடவடிக்கை


(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)

தற்பொழுது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்த்து வைக்கு முகமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய விவசாய அமைச்சு கிழக்கு மாகாணத்தில் விவசாய உற்பத்தி நடவடிக்கை களை அதிகரித்து வெளிநாட்டு நிதிகளை சேகரிப்பதற்கு கூடிய கவனம் செலுத்தியுள்ளது .

இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் உலக வங்கியின் நிதி உதவியில் நவீன மயமாக்கல் விவசாயதிட்டத்தில் சுமார் இருநூறு கோடி ரூபாய் செலவில் அமுல் நடத்தப்படும் வாழை ,சிவப்பு மாதுளை, பச்சை மிளகாய் நிலக் கடலை ,துவாய் பூசணிக்காய் . கெக்கறி காய் பட பலவகையான பளவகை கள்மற்றும் மரக்கறி வகைகளை உற்பத்தி செய்வதற்கு விவசாய அமைச் சின் வழிகாட்டுதலில் நவீன மயமாக்கல் விவசாய திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இலவசமாக நீர் பம்பிகள் சக்கர உழவியந்திரங்கள் மற்றும் உட் கட்டஅமைப்பு வசதிகளை வழங்குவதற்கு நவீன விவசாய திட்டத்தின் கீழ் விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்திருக்கின்றது .இந்தத் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இலவசமாக நீர் பம்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த இலவச நீர் பம்பிகளை குறித்த விவசாயிகளுக்கு வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருணாகரன் நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளர் கே. கருணாகரன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் உள்ளிட்ட அரச உயராதிகாரிகளும் விவசாயிகளும் பெருமளவில் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்தத் திட்டம்வாகரை மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைகளுதாவளை செங்கலடி ,வெல்லாவெளி உட்பட பல பிரதேசங்களில் சிறப்பாக அமுல் நடத்தப்பட்டு வருகிறது


No comments: