News Just In

6/01/2023 07:46:00 AM

மக்களை வியக்கவைத்த சூரிய அஸ்தமன காட்சி!

நியூயார்க்கின் மன்ஹாட்டனின் முக்கிய வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி சூரிய அஸ்தமன காட்சியை பார்த்துள்ளனர்.

மன்ஹாட்டனின் வானளாவி உயர்ந்த கட்டடங்களுக்கு மத்தியில், சூரியன் அஸ்தமனமான காட்சியை மக்கள் பார்த்து இரசித்துள்ளதுடன் அதனை காணொளியாக வெளியிட்டுள்ளனர்.

குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சிவப்பு – செம்மஞ்சள் நிற வண்ணத்துடன் வானத்தில் பெரிய நெருப்பு பந்துபோல் சூரியன் கட்டடங்களுக்கு நடுவே கீழே சென்றுள்ளது.

பூமி எப்போதும் நேராக சுழலாமல் 23 டிகிரி அச்சில் சாய்வாகத்தான் சுழல்கிறது. இதனால் பருவ மாறுதல்களை மாறி மாறி சந்திக்கிறோம்.

இவ்வாறு சாய்வாக சுழலும்போது உலக நாடுகளில் சில பகுதிகளில் சூரியனின் அஸ்தமனங்களும், உதயங்களும் இவ்வாறு பிரமாண்டமாக கண்கொள்ளாக் காட்சியாக அமைவது உண்டு என வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இம்மாதிரியான சூரிய அஸ்தமனம் ஜூலை மாதம் அங்கு மீண்டும் நிகழும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: