News Just In

5/31/2023 05:48:00 PM

மனைவியை தொந்தரவு செய்த நபருக்கு நேர்ந்த கதி!




அம்பாறையில் சகோதரிக்கு தொந்தரவு செய்த கணவனை நடுவீதியில் வெட்டி காயப்படுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் கூரிய ஆயுதத்தினால் வெட்டி காயப்படுத்தியுள்ளனர்.

இச் சம்பவம் இன்று காலை அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் இடம் பெற்றுள்ளதோடு அந் நபர்கள் அவ் இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 41 வயது மதிக்கத்தக்க இஸ்மாலெப்பை சிறாஜ்டீன் என்ற மேசன் வேலை செய்யும் குடும்பஸ்தரே காயமடைந்து கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியுமான பிரதம பொலிஸ் பரிசோதகர் அலியார் றபீக் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது்.

இரண்டாவது திருமணம் செய்த அந்த நபர் அவரது மனைவிக்கு தினம் தோறும் தொந்தரவு செய்து வந்த நிலையில் அது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தனது சகோதர்களிடம் முறையிட்டுள்ளார்.

இந்நிலையில் சகோதரிக்கு தொந்தரவு செய்து வந்த மச்சானை இரு சகோதரர்களும் வீதியில் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டிருப்பதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் மனைவி தரப்பிலும், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் தாக்குதலுக்கு இலக்கானவரும் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு அந் நபரை வெட்டி காயப்படுத்திய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கைது செய்ய கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



No comments: