News Just In

5/17/2023 08:05:00 PM

சிறுவர் பாதுகாப்பு இல்லங்களை தரப்படுத்துவதற்கும் சுகாதார மற்றும் இதர சேவைகளை நேர்த்தியாக வழங்குவதற்குமான கலந்துரையாடல்




நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் அம்பாறை மாவட்ட செயலகம் இணைந்து சிறுவர் பாதுகாப்பு இல்லங்களை தரப்படுத்துவதற்கும் சுகாதார வசதிகள் மற்றும் ஏனைய நல மேம்பாட்டு திட்டங்களை விருத்தி செய்வதற்குமான கலந்துரையாடல் ஒன்றினை இன்று (17) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த கலந்துரையாடலில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் விவாச செனவிரத்தின, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம் பீ ஏ வாஜித், தொற்றுநோய் தடுப்பியலாளர் வைத்தியர் எம்.ஏ.சீ.எம் பசால், சுற்றுச்சூழல் மற்றும் தொழில் வாண்மை சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.எம்.பௌஸாத், மாவட்ட செயலக உளநல சமூக உத்தியோகத்தர் யூ.எல். அஸாருதீன் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டனர்.

இந்நிகழ்வில் பங்குபற்றிய சிறுவர் பாதுகாப்பு இல்லங்களின் முகாமையாளர்களினால் தத்தமது இல்லங்களில் காணப்படுகின்ற பிரச்சினைகள் கோரிக்கைகள் என்பற்றை உள்ளடக்கிய விளக்கக்காட்சியுடனான திட்டப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டதுடன் அதற்கான தீர்வுகளை எவ்வாறு பெறுவது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. குறித்த நிகழ்வின் போது இல்லங்களின் முகாமையாளர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்ட சுகாதார நலன்கள் சார்பாக தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாகவும் இதற்கு சமூக மட்டத்திலுள்ள நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் பணிப்பாளர் அவர்கள் தனது உரையில் கோரியிருந்தார்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் இந்நிகழ்வில் பங்கு கொண்ட சிறுவர் பாதுகாப்பு இல்லங்களுக்கான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பொதிகள் அரசாங்க அதிபர் காரியாலயத்தினால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது


No comments: