News Just In

4/19/2023 06:57:00 PM

கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணிலின் அதிரடி உத்தரவு!

அடுத்த வாரத்திற்குள் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட இணக்கப்பாட்டுக்கு வர மறுத்தால் அவசரச் சட்டத்தின் கீழ் கல்வி அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இது தொடர்பான அறிவிப்பை விடுத்துள்ளது.

கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளின் கல்வியை பணயமாக எடுத்துக்கொள்ள மாட்டோம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments: