இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடனே பதிவாகி வருகின்றது.
இதேவேளை, கடந்த 2 மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நேற்றைய தினம் (08-02-2023) சற்று வீழ்ச்சியடைந்திருந்தது.
இவ்வாறான நிலையில், இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 192,350 ரூபாவாக பதிவாகியுள்ளது இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 176,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,350 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: