News Just In

2/20/2023 03:30:00 PM

கொழும்பில் ஒன்றுகூடும் ஆர்ப்பாட்டக்காரர்கள்!




ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் முகமாக கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் ஒல்கொட் மாவத்தை முற்றாக மறைக்கப்பட்டுள்ளது.

ஏராளமான பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை பிரயோக வண்டிகளும் ஸ்தலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் டெக்னிக்கல் சந்தியில் உள்ள டெக்னிக்கல் கல்லூரிக்கு முன்பாக ஒன்று கூடியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள்  தெரிவிக்கின்றன

No comments: