கொழும்பு, பொரளையில் தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் சடலம் அவர் தங்கியிருந்த அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைவிட்டு சென்ற காதலியின் கையடக்க தொலைபேசிக்கு தூக்கில் தொங்குவதனை போன்ற புகைப்படம் ஒன்றை அனுப்பி விட்டு குறித்த இளைஞன் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
கிரிவத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் உயிரிழந்த மாணவன் யுவதி ஒருவருடன் காதல் தொடர்பில் ஈடுபட்டிருந்ததாகவும், அதனை அந்த யுவதி சில காரணங்களால் நிறுத்தியதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மாணவனின் தந்தை பன்னிபிட்டிய பிரதேசத்தில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கு வசதியாக தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் அந்த வீட்டின் அறையொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் மாணவன் தனது கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்ட புகைப்படத்தை காதலிக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதுடன், தான் உயிரிழப்பதாக பல குறுஞ்செய்திகளையும் அனுப்பியிருப்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதற்கமைய, மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவனின் தந்தை மற்றும் உறவினர்கள் வந்து அவர் தங்கியிருந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது விசிறியில் மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை பார்த்துள்ளனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் அதற்கு முன்னரே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
No comments: