News Just In

2/17/2023 05:44:00 PM

தொடர் சரிவில் தங்கம் விலை; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

சென்னையில் தங்கம் விலையானது இன்று ஐந்தாவது நாளாக சற்று குறைந்து காணப்படுகின்றதாக கூறப்படுகின்றமை தங்க நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலையானது தொடர்ந்து 1 மாதத்திற்கும் மேலாக சரிவில் காணப்படுகின்றது. இது தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலர் மதிப்பு, தொடர்ந்து வலுவடைந்து காணப்படுகின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். டாலர் மதிப்பு, பத்திர சந்தையும் ஏற்றம் கண்டு வருகின்றது.

இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளது.

மேலும் தொடர்ந்து அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது.

எனினும் தொடர்ந்து தங்கத்தின் தேவையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 16.15 டாலர்கள் குறைந்து, 1835.65 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாகவே தொடங்கியுள்ளது.

எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு, சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. தற்போது 1.28% குறைந்து, 21.433 டாலராக காணப்படுகிறது.
இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 358 ரூபாய் குறைந்து, 55,870 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று குறைந்தே காணப்படுகின்றது.

இது கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து, 5250 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, 42,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தூய தங்கம் விலை , இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து, 5723 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதே 10 கிராமுக்கு 370 ரூபாய் குறைந்து, 57,230 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆபரண வெள்ளி விலை, வெள்ளி விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்றே குறைந்து காணப்படுகின்றது.

இன்றும் கிராமுக்கு 60 பைசா குறைந்து, 71.20 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து, 71,600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

No comments: