அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை வழங்கப்படமாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த் குமார் மேற்குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் தைப்பொங்கல் என்பதால், நாளை திங்கள் கிழமை(16) தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்வதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், மூன்றாம் தவணை விடுமுறை 3 கட்டங்களாக வழங்கப்பட்டுவருவதை கருத்திற்கொண்டு, நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளைய தினம் வழமைபோல பாடசாலை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறுமென இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments: