News Just In

1/16/2023 11:22:00 AM

இலங்கையில் கடுமையாக அமுலாகவுள்ள புதிய சட்டம்!




ஆண்களுக்கு ஆண்களுக்கும், பெண்களுக்கு பெண்களுக்கும் மட்டுமே மசாஜ் கடமைகளில் ஈடுபட முடியும் என்ற வகையில் சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

அதற்காக பல்வேறு வழிகளில் சட்டம் இயற்றப்படும் என ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

மசாஜ் நிலையங்கள் மூலம் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் ரீதியான நோய்கள் பரவலாக பரவி வருவதால் இந்த சட்டம் இயற்றப்படுவதாக ஆணையர் கூறுகிறார்.

ஆயுர்வேத திணைக்களத்தில் மசாஜ் நிலையங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் கட்டாயமாக இருக்க வேண்டும். மேலும், மசாஜ் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்கள் தொழில்சார் அறிவு மற்றும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

No comments: