News Just In

1/27/2023 09:59:00 AM

மின்சார சபைக்கு 108 பில்லியன் ரூபா வருமானம்!




புதிய கட்டண முறையை நடைமுறைப்படுத்திய முதல் மூன்று மாதங்களில் மின்சார சபைக்கு 108 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடி மற்றும் நஷ்டம் காரணமாக தொடர்ந்து மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என்ற கூற்று ஏற்றுக்கொள்ள முடியாதது என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.




No comments: