News Just In

11/17/2022 09:56:00 AM

வாகனப் பதிவுக் கட்டணத்தில் திருத்தம்





நாளை (18) முதல் அமுலுக்கு வரும் வாகனப் பதிவுக் கட்டணத்தை திருத்தியமைக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
பதிவு கட்டண விபரங்கள்




சாதாரண அடிப்படையில் பதிவை ரத்து செய்வதற்கான கட்டணம் 1000 ரூபாவாகவும், முன்னுரிமை அடிப்படையில் ரத்து செய்ய 2000 ரூபாவும் மற்றும் ஒரு நாள் அடிப்படையில் ரத்து செய்ய 3000 ரூபாவும் அறிவிடப்படும்.
விண்ணப்பம் சமர்ப்பிப்பு

ஒருவரை ஒரு மோட்டார் வாகனத்தின் புதிய உரிமையாளராகப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் அத்தகைய மோட்டார் வாகனத்தின் உடமை மாற்றத்திலிருந்து 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்படாவிட்டால், அத்தகைய மோட்டார் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரால் தானாக முன்வந்து மாற்றப்பட்டதாக கருதப்படும்.

இதன்படி ஒவ்வொரு நாளுக்கும் கூடுதல் தாமதக் கட்டணத்தை செலுத்த வேண்டும். சாதாரண அடிப்படையில் ஒரு பதிவை ரத்து செய்வதற்கும், மோட்டார் வாகனத்தின் இடைநீக்கத்தை அகற்றுவதற்கும் கட்டணம் 1000 ரூபாவாகவும் முன்னுரிமை அடிப்படையில் 1500 ரூபாவாகவும், ஒருநாள் அடிப்படையில் 2000 ரூபாவாகவும் அறவிடப்படும்.

No comments: