News Just In

10/12/2022 11:11:00 AM

திருக்கோணேஸ்வரர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை!




திருகோணஸ்வரர் ஆலயத்திற்குச் சொந்தமான காணிக்குள் அனைத்து கடைகளையும் அங்கு இருந்து அகற்றி அதற்கு பொருத்தமானதோர் இடத்தில் நிறுவுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு்ள்ளது.

புத்த சாசன சமய மற்றும் கலாச்சார அமைச்சர் விதுர விக்ரம நாயக மற்றும் கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர்நேற்று  (11.10.2022) திருகோணமலைக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இப்பயணத்தின் போதே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
திருகோனேஸ்வரர் ஆலயம்திருகோணமலையில் பிரசித்தி பெற்ற திருகோனேஸ்வரம் ஆலயத்திற்கு பயணம் செய்த அமைச்சர்கள் அங்கு விசேட வழிபாடுகளில் கலந்து கொண்டதோடு திருகோணேஸ்வர ஆலயத்தின் தொல்பொருள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிக்கப்படும் காணிகள் தொடர்பாகவும் அங்கு நிறுவப்பட்டு வரும் கடைத்தொகுதிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.

இப் பயணத்தின் பின்னராக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட ஆலய நிர்வாகத்தினருடன் குறித்த விடயம் சம்பந்தமாக கலந்துரையாடலும் இடம்பெற்றது.

ஆலயத்திற்குச் சொந்தமான காணிக்குள் அனைத்து கடைகளையும் அங்கு இருந்து அகற்றி அதற்கு பொருத்தமானதோர் இடத்தில் நிறுவுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு்ள்ளது.

மேலும் கோவிலுக்காக பயன்படுத்தப்படும் வீதியில் அதிக வாகனங்கள் செல்ல முடியாததன் காரணமாக வாகனத்தரிப்பிடம் ஒன்றினை ஏற்படுத்துவத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

No comments: