News Just In

10/04/2022 06:51:00 AM

எரிபொருள் விநியோகத்தில் தடங்கல் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

"தவறான செய்திகள் மற்றும் அறிக்கைகள் மூலம் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்" என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பெற்றோலிய விநியோகஸ்தர்களால் மேற்கொள்ளப்படக்கூடிய வேலைநிறுத்தம் குறித்து பதிலளித்தார்.

இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்த்தர் சங்கத்தினர் நாளைய தினம் சேவை புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விநியோக செயற்பாட்டு செலவினங்களுக்கு கனியவள கூட்டுதாபனத்தினால் 45 சதவீத கட்டணக் கழிவு வழங்கப்படுகிறது. இந்தநிலையில் குறித்த கட்டண கழிவை மீளப்பெறுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்த்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே எரிபொருள் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments: