News Just In

10/10/2022 02:09:00 PM

இடர்காலத்தில பாடசாலையை சிறந்த முறையில் இயங்கச் செய்தமைக்காக அதிபர் துஷ்யந்திக்கு விருது




- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இடர்காலத்தின்போது பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட சிறந்த செயற்பாடுகளுக்காக மட்டக்களப்பு கொம்மாதுறை விநாயகர் வித்தியாலயத்தின் அதிபர் துஷ்யந்தி ஜெயவதனன் கல்வி அமைச்சினால் சிறந்த அதிபருக்கான 'குரு பிரதீபா பிரபா” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண மட்டத்தில் நேர்முகப்பரீட்சை மூலம் சிறந்த 5 அதிபர்களும் 10 ஆசிரியர்களும் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்ககளும் குரு பிரதீபா விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

உலக ஆசிரியர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில்> இடர்காலத்தின்போது பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட சிறந்த செயற்பாடுகளுக்காக (Best Practice) இந்த கெரவிப்பும் விருதுகளும் கல்வி அமைச்சால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியரான துஷ்யந்தி மட்டக்களப்பு வின்செனற்; தேசிய கல்லூரியின் பழைய மாணவியாவார். கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பட்டத்தைப் பெற்ற இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டமேற்கல்வி டிப்ளோமா> விசேட தேவைகள் சார் பட்டமேற்கல்வி டிப்ளோமா ஆகிய தொழில்சார் தகைமைகளைப் பூர்த்திசெய்துள்ளார். தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வி முகாமைத்துவத்தில் கல்வி முதுமாணி பட்டக் கற்கை நெறியை தற்போது தொடர்கின்றார்.

போட்டிப்பரீட்சை மூலம் அதிபர் சேவையில் இணைந்துடன்> கல்வி அமைச்சின் புலமைப்பரிசில் பெற்று மலேசியா Nottingham பல்கலைக்கழகத்தில் அதிபர்களுக்கான நவீன தலைமைத்துவமும் முகாமைத்துவமும் சார் பயிற்சியையும் பெற்றுள்ளார்.







No comments: