News Just In

10/09/2022 08:31:00 AM

58 இலங்கை இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளில் கைது செய்யப்படும் அபாயம்!

58 இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளில் கைது செய்யப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 6ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு அமைய இலங்கையைச் சேர்ந்த 58 இராணுவ அதிகாரிகளை வெளிநாடுகளில் வைத்து கைது செய்ய முடியும் என தெற்கு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த இராணுவ வீரர்களின் பெயர் பட்டியல்களை தீர்மானத்தை சமர்ப்பித்த 31 நாடுகளுக்கு அனுப்பி வைக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 6ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 20 நாடுகள் வாக்களித்தன.

இதேவேளை, இந்த தீர்மானத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றிக்கொள்வதற்கு சுமார் 18 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை புலி ஆதரவு புலம்பெயர் சமூகம் செலவிட்டுள்ளதாக அந்த தெற்கு சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

No comments: