News Just In

10/11/2022 11:04:00 AM

ஒரே நேரத்தில் சேவையில் இருந்து வெளியேறிய 249 விசேட வைத்திய நிபுணர்கள்



இலங்கையில் விசேட வைத்தியர்களின் தேவையில் 45 சதவீதம பற்றாக்குறை நிலவுகின்ற போதில் 249 விசேட வைத்திய நிபுணர்கள் ஒரே நாளில் ஓய்வு பெறவுள்ளனர்.

இதன் காரணமாக வைத்தியசாலை கட்டமைப்பு கடும் நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதிக எண்ணிக்கையிலான சிறப்பு மருத்துவர்கள் ஓய்வு பெறுவதால், மருத்துவப் படிப்புக்குப் பின்னரான பயிற்சியும் பாதிக்கப்படலாம் என்று மருத்துவப் பயிற்சி நிறுவன இயக்குநர் எழுத்து மூலம் சுகாதாரச் செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

2023ஆம் ஆண்டு வெளிநாட்டுப் பயிற்சியை முடித்துக்கொண்டு இலங்கைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படும் 299 பேரின் சேவையை ஓய்வுபெற்ற விசேட வைத்தியர் வெற்றிடத்திற்காக இணைத்துக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments: