News Just In

9/17/2022 05:45:00 AM

ஐ.நாவில் கோட்டாபயவை பிரதிநிதித்துவப்படுத்தும் அலி சப்ரி..! குற்றம் சுமத்திய சாணக்கியன்!

அமைச்சர் அலி சப்ரி வெளிவிவகார அமைச்சராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா அல்லது அவர் தனது வாடிக்கையாளரான கோட்டாபய ராஜபக்சவை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் பங்கு குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் குறித்த கேள்விகளை எழுப்பினார்.

இலங்கையில் பொருளாதார குற்றங்கள் இழைக்கப்படவில்லை என அமைச்சர் சப்ரி ஐக்கிய மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்திருந்த போதிலும், பொருளாதார குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக சாணக்கியன் குறிப்பிட்டார்.

அப்போது, நீதியமைச்சராக இருந்து அரசியலமைப்பில் 20 வது திருத்தத்தை கொண்டு வந்தமையால் பொருளாதார குற்றத்துக்கு, அலி சப்ரியும் பொறுப்பேற்க வேண்டும் சாணக்கியன் குற்றம் சுமத்தினார்.

No comments: