News Just In

9/27/2022 10:28:00 AM

வைத்திய அதிகாரி ஜலீலா எழுதிய “சிறகு முளைத்த மீன்;” கவிதை நூல் வெளியீட்டு விழா





- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாகப் பணியாற்றும் ஹயாத்துமுஹம்மது ஜலீலா முஸம்மில் எழுதிய “சிறகு முளைத்த மீன்;” கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை 01.10.2022 ஏறாவூர் வாவிக்கரை கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவி ஆசிரியை என்.எம். ஆரிபா தெரிவித்தார்.

வைத்தியர் ஜலீலா எழுதிய இந்த கவிதை நூல் தொகுப்பில்; தந்தை சொல் மிக்க மந்திரமில்லை தாயிற் சிறந்த கேடயமில்லை சேற்றில் நின்று சோற்றைத் தருகிறார் உள்ளிட்ட சுமார் 85 தலைப்புக்களில் கவிதைகள் புனையப்பட்டுள்ளன.

“சிறகு முளைத்த மீன்;” கவிதை நூல் வெளியீட்டு விழாவில் இலக்கியவாதிகள்> எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இக்கவிதை நூலின் நூல் நயந்துரையை பல்துறைக் கலைஞரும் ஹாஷ்ய நாடக எழுத்தாளரும் நகைச்சுவை நடிகருமான கவிக்கோ ஏறாவூர் ஏ.சி. அப்துல் றஹ{மான் நிகழ்த்தவுள்ளார். அதிதிகள் உரை  ரசனைக் குறிப்பு என்பனவும் நிகழ்வில் இடம்பெறவுள்ளன.

கவிதை நூலாசிரியர் வைத்தியர் ஜலீலா அலிகார் தேசியக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மறைந்த யூ. ஹயாத்து முஹம்மதுவின் மகளாவார். இவரது கவிதைகள்> ஆக்கங்கள் இலங்கையின் தேசியப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.


No comments: