News Just In

9/20/2022 06:39:00 AM

அரச அலுவலகர்களுக்கான தமிழ் மொழி வகுப்புகள் ஆரம்பம்!

அரச கரும மொழிகள் திணைக்களத்தினால்அரச அலுவலகர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள மற்றும் தமிழ் மொழிக் கற்கைநெறிகள் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 18/2020 சுற்று நிருபத்திற்கு அமைவாக தமிழ் பேசும் அரச அலுவலகர்களுக்கு சிங்களமொழி பாடநெறியும், சிங்கள மொழி பேசும் அரச அலுவலகர்களுக்கு தமிழ் மொழி பாடநெறியும் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இவ்வாறான பாடநெறிகள் பொலன்னறுவை மாவட்டத்திற்கான பல அலுவலகங்களிலும் திணைக்களங்களிலும் நடைபெற்று வரும் நிலையில், பொலன்னறுவையில் காணப்படும் பல்வேறு அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுக்கான தமிழ் பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு ஒன்றினைந்த மொழி விருத்தி உத்தியோகத்தர் பி.ஏ.ரீ.சுஜீவனி பிடிகலவின் நெறிப்படுத்தலில் பொலன்னறுவை மாவட்ட செயலகத்தின் உதவிச் செயலாளர் டி.எஸ்.எஸ்.முத்துமாலி தலைமையில் பொலன்னறுவை மாவட்ட செயலகத்தின் கேற்போர்கூடத்தில் நடைபெற்றது.

நாட்டின் நிர்வாகத்துறையினைச் சிறப்பாக முன்னெடுக்கும் வகையிலும், சகல இன மக்களிடத்திலும் மொழி வழியிலான சமாதானம், ஐக்கியம், இன ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் வகையிலும் அரச உத்தியோகத்தர்களை இரு மொழிப்பயன்பாட்டிற்கு தேர்ச்சி பெறச்செய்யும் நோக்கில் தமிழ் பேசும் அரச ஊழியர்களுக்கு சிங்களமொழி பாடநெறியும்இ சிங்களமொழி பேசும் அரச ஊழியர்களுக்கு தமிழ்மொழி பாடநெறியும் அறிமுகப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இப்பயிற்சிநெறிக்கு வளவாளராக அரச கரும மொழிகள் திணைக்களத்தின் போதனாசிரியரான எம்.எம். செய்னுதீன் கலந்து கொண்டு பாடநெறிகளை ஆரம்பித்து வைத்தார்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments: