News Just In

9/08/2022 11:46:00 AM

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156வது பொலிஸ் தினத்தினை முன்னிட்டு மாபெரும் சிரமான நிகழ்வு!




நூருல் ஹுதா உமர்

பொலிஸ் வாரத்தினை முன்னிட்டு இறக்காமம் பொலிஸ் நிலையத்தினால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சமைய வழிபாட்டு நிகழ்வுகள், நடமாடும் பொலிஸ் திணைக்கள மற்றும் மருத்துவ சேவைகள், மர நடுகை, சிரமதான பணிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இத்தொடரில், ஐந்தாம் நாளான புதன்கிழமை இறக்காமம் பிரதேச வைத்தியசாலை மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை என்பவற்றில் சிரமதானப் பணி இடம்பெற்றது. இச்சிரமதான பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில், இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். ஜமீல் காரியப்பர், இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான், இறக்காமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மஹிந்த சேனாரட்ன, இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் மீனா, ஆயுர்வேத மக்கள் வைத்தியர் கே.எல்.எம். நக்பர் உட்பட பிரதேச செயலக சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர். ஏ.எல். ஜமீல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இறக்காமம் பொலிஸ் நிலைய நிருவாக பொறுப்பதிகாரி எம்.வை. ஜௌபர் அவர்களின் வழிநடாத்தலில் அபிவிருத்தி உத்தியோகத்தர். ஏ.எல். ஜமீல் அவர்களின் ஏற்பாட்டில் சமுர்த்தி சங்கம், சமுர்த்தி பயனாளிகள் மற்றும் பிரதே சபை, வைத்தியசாலை ஊழியர்களின் பங்களிப்புடன் மேற்படி சிரமதானப் பணி சிறப்பாக இடம்பெற்றமை குறி ப்பிடத்தக்கது.


No comments: