News Just In

8/17/2022 09:51:00 AM

இலங்கைக்கு பெரும் வர்த்தகச் சலுகையை வழங்கியது பிரித்தானியா !!





2023 ஆம் ஆண்டிலிருந்து வளரும் நாடுகளுக்கான வர்த்தக திட்டத்தில் (DCTS) இலங்கையையும் இணைத்துக்கொள்ள பிரித்தானியா தீர்மானித்துள்ளது.

இதன்மூலம் பிரித்தானிய சந்தைகளுக்கு அதிக அனுகூலங்கள்  வழங்குவதன் மூலம் இலங்கைக்கு நன்மை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 80%க்கும் அதிகமான ஏற்றுமதிப் பொருட்களை இங்கிலாந்து சந்தையில் வரியின்றி பெற்றுக்கொள்ள முடியும்

இது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் அதேவேளை வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் கூறியுள்ளார்.

இந்த திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. வரிசலுகையை போன்ற திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share12

No comments: