News Just In

7/10/2022 09:40:00 AM

நாட்டின் பொருளாதாரம் ஓங்கி நிம்மதியாக வாழ்ந்து நாட்டில் சுபீட்சம் ஓங்க எல்லோரும் இந்த புனிதமிகு நாளில் பிராத்திப்போம்.!


நூருல் ஹுதா உமர்

வளம் பெறும் இந் நாள் நலம் பெறும் மக்கள் கூட்டம், தியாகத்தின் திருநாள், தீமைகள் போக்கும் பெருநாள் உன்னத நபி இப்றாகிமும் தன் மகனார் இஸ்மாயிலும் உத்தமர்கள் மனிதகுல நேசர்கள் வரலாறு நினைவு கூறும் இந்நாள் நன்நாள். ஹஜ் கடமை முடித்திட பெரும் திரளாய் திரண்டு மக்கமாம். அந்த மக்கத்து நகரும் மதினத்து வாசலும் ஒளி பெறும் திருநாள்.

முஸ்லிம்கள் குளித்து புத்தாடை அணிந்து நறுமணம் பூசி சுத்தமாகி மஸ்ஜிதை தரிசித்து மானிடத்தை நிலை நிறுத்த உத்தம நபிகள் வழியில் கட்டியனைத்து முத்தமிட்டு ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரன் என்பதை நிரூபிக்கும் ஹஜ் நாளில் இலங்கைக்கு நல்ல தீர்வு கிட்டட்டும். சகோதர நாடுகள் சமாதானம் தர உதவட்டும். உலக வாழ் மக்கள் நெஞ்சில் ஒளி வீசட்டும். ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்கள்.

தேர்தல்கால குத்துவெட்டுக்கள், அரசியல் நெருக்கடிகள், இனவாத பேரிடரால் அவதியுறும் இலங்கை தேசம் பொருளாதார சீர்கேட்டில் படுபாதாள குழியில் வீழ்ந்து கிடக்கும் இந்நிலையில் நாட்டின் பொருளாதாரம் ஓங்கி இலங்கையர்கள் நிம்மதியாக வாழ்ந்து நாட்டில் சுபீட்சம் ஓங்க எல்லோரும் இந்த புனிதமிகு நாளில் பிராத்திப்போம்.

கலீலுர் ரஹ்மான் (ஊடகவியலாளர்)
கொழும்பு மாநகர சபை உறுப்பினர்
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு


No comments: