VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • சுமத்ரா தீவுக்கு அருகில் நிலநடுக்கங்கள்: இலங்கையில் சுனாமி அபாயம்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
    சுமத்ரா தீவுக்கு அருகில் நிலநடுக்கங்கள்: இலங்கையில் சுனாமி அபாயம்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய சுன...
  • மட்டுநகரின் மற்றொரு ஆளுமை!
      மட்டுநகரின் மற்றொரு ஆளுமை!    மருத்துவ துறையில் பேராசிரியர்பட்டத்தை பெற்றார்  மயூரன் அவர்கள்
  • தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
    தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
  • 07 லட்சம் வரை தங்கம் அதிகரிக்க வாய்ப்பு..! இலங்கை மக்களுக்கு வந்த அதிர்ச்சிச் செய்தி
    07 லட்சம் வரை தங்கம் அதிகரிக்க வாய்ப்பு..! இலங்கை மக்களுக்கு வந்த அதிர்ச்சிச் செய்தி சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4100 அமெரிக்க டொருக்க...
  • வேனும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; ஏழு பேர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதி
    வேனும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; ஏழு பேர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதி மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்...
  • ஐ.நாவிடம் வாக்குமூலம் வழங்க தயாரான பிள்ளையானின் முக்கிய புள்ளி கஜன் மாமாவுக்கு நேர்ந்த கதி!
    ஐ.நாவிடம் வாக்குமூலம் வழங்க தயாரான பிள்ளையானின் முக்கிய புள்ளி கஜன் மாமாவுக்கு நேர்ந்த கதி! 2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு ...
  • 'போதையை ஒழிக்கும் பாதையை வகுப்போம்' எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம்!
    வடமாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் யாழ்ப்பாண உளநல பிரிவு போதனா வைத்தியசாலை பிரிவு ஆகியன "போதையை ஒழிக்கும் பாதையை வகுப்போம்...
  • யாழில் செவ்வந்தி தங்கிய வீட்டில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்!
    யாழில் செவ்வந்தி தங்கிய வீட்டில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்! இஷாரா செவ்வந்திக்கு இந்தியா தப்பிச் செல்வதற்காக படகுகளை ஒழுங்குபடுத்தி கொடுத...
  • வேன் மீது துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸார் ; வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
    வேன் மீது துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸார் ; வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ரத்மலானையில் நேற் று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை ...
  • வடக்கு கிழக்கில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
    வடக்கு கிழக்கில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பகுதிகளில் ம...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News