News Just In

6/28/2022 02:11:00 PM

எரிபொருளை இறக்குமதி செய்து விற்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிற்கு அமைச்சரவை அனுமதி!




எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்து விற்பனையில் ஈடுபடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.எரிபொருள் இறக்குமதி விற்பனை சந்தைகளை வெளிநாட்டு நிறுவனங்களிற்கு திறந்துவிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுஅமைச்சர் காஞ்சனவிஜயசேகர இதனை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான திறன் மற்றும் ஆரம்பகாலத்தில் மத்திய வங்கி மற்றும் ஏனைய வங்கிகளிடமிருந்து டொலரை பெறாமல் இயங்ககூடிய திறன் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து வெளிநாட்டு நிறுவனங்களை தெரிவு செய்ய உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த நிறுவனங்களிற்கு அவசியமான களஞ்சிய விநியோக சேவை போன்றவற்றை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கும் என டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள அமைச்சர் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் காணப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments: