News Just In

6/02/2022 05:30:00 PM

தென்னிலங்கையில் பரபரப்பு- வெடித்துச் சிதறிய வெடிகுண்டு!

எல்பிட்டிய பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்பு சம்பவம் இன்று காலை 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாகஹதென்ன, கஜு கஸ்வத்த பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறம் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பில் அருகில் உள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் உரிமையாளர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக எல்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




No comments: