News Just In

6/27/2022 06:20:00 AM

எரிபொருளுக்கான குடும்ப அட்டையை நடைமுறைப்படுத்த வேண்டும் : மாநகர சபை முதல்வர் சரவணபவான்

அரசாங்க அதிபர் அரசியல் கட்சிக்கு சூழ்நிலை கைதியாக இருக்காது பொதுமக்கள் நலன் சார்ந்து சில தீர்மானங்கள் எடுக்கவேண்டும் எனவும் அறிமுகப்படுத்தப்பட்ட குடும்ப அட்டையை நடைமுறைப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் ரி. சரவணபவான் தெரிவித்துள்ளார்.

மட்டு. மாநபகரசபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபொன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் எரிபொருள் நிலையத்துக்கு முன்னாள் மிக நீண்ட வரிசையில் நாட்கணக்கில் மக்கள் காத்திருந்து எரிபொருளை பெற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் காரணமாக எரிபொருளில் எமது மக்கள் பாரிய சிக்கலை எதிர் நோக்கிவருகின்றனர்.

அதனை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் இரண்டு வாரங்களுக்கு முன்பு பிரதேச செயலக மட்டத்தில் கூடி குடும்ப அட்டை மூலமாக எரிபொருளை விநியோகிக்க முன்மொழிந்தோம்.

அதனை முன்னெடுக்கும் போது பதுக்கள் மற்றும் நீண்ட வரிசையில் காத்திருப்பு போன்றவற்றை தவிர்திருக்கலாம் இவ்வாறு பல நன்மைகளை ஏற்படுத்தக் கூடியவளவு குடும்ப அட்டையை முன்மொழிந்தோம். அதனை மாவட்ட மட்டத்தில் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடும் போதும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்வைத்தோம்.

இதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்த செயலி ஒன்றையும் தயாரித்தோம் இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த குழறுபடியும் இல்லாதவாறு இந்த எரிபொருளை விநியோகத்தை சீராக்கி இருக்கலாம்.

ஆனால் இதுவரை அந்த தீர்மானம் நடைமுறைத்தப்படவில்லை. இதுவரை குடும்ப அட்டைக்கான எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை எனவே இதற்கு அரசாங்க அதிபர் சரியான அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை. அவர் ஒரு அரசியல் கட்சியின் அழுத்தம் காரணமாக இந்த முறையையை பின்பற்றாமல் தாமதிக்கின்றாரா என சந்தேகம் ஏற்படுகின்றது.

எல்லா எரிபொருள் நிலையத்துக்கு முன்னாள் நீண்ட வரிசையில் நாட்கணக்கில் மக்கள் காத்திருந்து எரிபொருளை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். எனவே அரசாங்க அதிபர் அரசியல் கட்சிக்கு சூழ்நிலை கைதியாக இருக்காது பொதுமக்கள் நலன் சார்ந்து சில தீர்மானங்கள் எடுக்க வேண்டும்.

அப்படி எடுக்கும் போது தான் எங்களால் முன்மொழியப்பட்ட நடைமுறையை அவர் பின்பற்றும் போது அதனை பிரதேச செயலாளர்கள் பின்பற்றுவார்கள் அதற்கான ஆதரவை அரசாங்க அதிபர் அந்த பிரதேச செயலாளருக்கு வழங்கவேண்டும்.

இலங்கையில் ஏனைய மாவட்டங்களில் இந்த விநியோகம் சீராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் அரசாங்க அதிபர் எங்களால் முன்மொழியப்பட்ட குடும்ப அட்டைக்கு விநியோகிப்பதற்கு என்ன காரணம் என்று தெரியாது.

எனவே இவ்வாறான விடயங்களை அவர் தவிர்த்து உடனடியாக குடும்ப அட்டைக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் அதேவேளை முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்க முன்மொழியப்படுகின்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சுகாதார உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுவது நல்ல விடயம்.

ஆனால் இலங்கையில் பொருளாதாரத்தின் முதுகொலும்பாக இருக்கின்ற தனியார் துறையினருக்கு எந்தவொரு சலுகையும் வழங்கப்படவில்லை.

இலங்கையில் வேலைவாய்ப்பை வழங்குகின்றதுறையில் 82 வீதம் தனியார் துறையின் ஆகவே அதிகமானவர்கள் தனியார் துறையில் இருக்கின்றனர் எனவே அவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் முன்னுரிமை பட்டியலில் தனியார் துறையினரையும் சோத்துக் கொள்ள வேண்டும்.

அதேவேளை இதற்கு மேலதிகமாக நிவாரணங்களை வழங்கும் அரசசார்பற்ற நிறுவனங்கள் கூட இதில் புறக்கனிக்கப்படுகின்றனர் அவர்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

நாங்கள் இந்த மாநகரசபையை பொறுப்பு எடுத்துக் கொண்ட போது முச்சக்கரவண்டிகளை பதியுமாறு கோரினோம் முச்சக்கரவண்டிகள் சங்கங்கள் பலமாக இருந்திருந்தால் எங்களுடன் பதிந்திருந்தவர்கள் ஊடாக வலுவான கோரிக்கையை முன்வைத்திருக்கலாம்.

எனவே முச்சக்கரவண்டி சங்கம் ஒன்றாக பதிவு செய்து அவர்களும் தங்களது கோரிக்கையை முன்வைத்து தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும்.

கடந்த காலத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூடாத காரணத்தால் சில விடயங்களை தள்ளிபோட்டிருந்தோம்.

தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருப்பதன் காரணத்தால் அங்கு பாதுகாப்பு கேள்விகுறியாக இருந்த நிலையில் நாங்கள் கடந்தவாரம் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டோம் அதில் 5 விடயங்களை சோதனை நடாத்தினோம்.

அதில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எந்த விடயமும் சரியான முறையில் இல்லாத காரணத்தால் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அறிவுறுத்தல் நோட்டீஸ் ஒட்டினோம் இவ்வாறு பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதை அரசாங்க அதிபர் கண்காணிக்க வேண்டும்.

அதேவேளை சரியான முறையில் எல்லா பிரதேசங்களுக்கும் எரிபொருளை வழங்க வேண்டியது அரசாங்க அதிபருக்கு பாரிய பொறுப்பு உள்ளது எனவே அதனை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

No comments: