News Just In

6/28/2022 01:55:00 PM

வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தந்தால் வாகநேரியில் சுமார் 1500 ஏக்கர் மீள் இடைப்போகம் செய்ய முடியும்.அகில இலங்கை விவசாய சம்மேளன மாவட்டத் தலைவர்






hussein abdul


மட்டக்களப்பு வாகநேரி விவசாயக் கண்டத்தில் தற்போது மீள் இடைப்போக நெற் செய்கையை மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது. தற்போதைய உணவு நெருக்கடிnயைத் தீர்க்க இது ஒரு இயற்கையின் கொடையாக அமையும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கு அரசு எமக்கு உர விநியோகத்தை சீராகச் செய்ய வேண்டும் என அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் எஸ். யோகவேள் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது

வாகநேரி விவசாயக் கண்டத்தில் சுமார் 1500 ஏக்கர் தொடக்கம் 2000 ஏக்கர் வரையான மீள் இடைப்போக நெற்செய்கையை மேற்கொள்ள முடியும். ஆனால் அதற்கு உரம் தேவை. அவ்வாறு உரத்தை அரசு வழங்குமாக இருந்தால் பிரதேச விவசாயிகள் நம்பிக்கையுடன் மீள் இடைப்போகத்தைச் செய்ய முடியும்.

இந்த இடைப்போகம் ஜுலை மாதம் நடுப்படுகுதியில் ஆரம்பித்து ஒக்ரோபெர் மாதத்திற்குள் அறுவடை செய்ய முடியும். இது நாட்டில் ஏற்படப் போகிறது என எதிர்வு கூறப்படும் உணவுப் பஞ்சத்தைப் போக்க வழிகோலும்.

எனவே இந்த விடயத்தில் துறைசார்ந்த அதிகாரிகள் முழு ஒத்துழைப்பையும் வழங்கி பிரதேச விவசாயிகளுக்கு உதவ முன்வரவேண்டும் இது விடயமாக தாம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் அறிவித்துள்ளதாகவும்” அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் யோகவேள் மேலும் தெரிவித்தார்.







No comments: