மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டமானது 16.05.2022 திங்கள் கிழமை மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி க.சசீந்திரனின் ஒழுங்கமைப்பு மற்றும் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி நிசாந்தி அருள்மொழி அதிதியாக கலந்து கொண்டார்.
இதன் போது மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்திற்கு என புதிய நிர்வாக தெரிவும் இடம்பெற்றது இதன்படி சம்மேளனதின் புதிய தலைவராக மா.சதீஸ்குமார் தெரிவு செய்யப்பட்டதுடன் செயலாளராக க.சசீந்திரன் (இ.சே.உ), பொருளாளராக க.யோகிதா, அமைப்பாளராக பா.துசாந்தினி,உப தலைவராக ப.விஜிதரன், உப செயலாளராக த.டிசாளினி மற்றும் உப அமைப்பாளராக ம.நிருஜா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
No comments: