நூருல் ஹுதா உமர்
இறக்காமம் பிரதேச குடும்பங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் சுமார் 200க்கும் மேற்பட்ட வறிய குடும்பங்களை இனங்கண்டு அதில் 100 குடும்பங்களுக்கு இலவச நீர் வழங்குதல் மற்றும் வீட்டுக்கான மின் இணைப்பு வசதியினை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு SAY_YES பெமிலிஸ் றிலீப்ஃ ட்ரஸ்ட் நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
சமூக செயற்பாட்டாளர் எஸ்.எல்.எம் றஜாவினால் குறித்த குடும்பங்கள் இனங்காணப்பட்டு நேற்று (19) இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அதற்கான நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் SAY_YES பெமிலிஸ் றிலீப்ஃ ட்ரஸ்ட் நிறுவனத்தின் செயற்பாட்டாளர் பொறியியலாளர் சீ.கே. நிஷாத், இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம் றஸ்ஷான் உதவித்திட்ட பணிப்பாளர் கே. ஹம்ஸார் திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆஹிர், அய்மன் கலை மன்ற தலைவர் சன்சிர் அதன் செயற்பாட்டாளர் பீ.டீ. கலீல் உட்பட ஏனைய உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
No comments: