News Just In

5/01/2022 04:50:00 PM

போராட்டக் கூடாரங்களை காவல்துறையினர் அகற்றியதையடுத்துநடுவீதியில் போராட்டத்துக்கு இறங்கிய மக்கள்!

அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் நடுவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அலரிமாளிகைக்கு அருகில் வீதியோர போராட்டக் கூடாரங்களை காவல்துறையினர் அகற்றியதையடுத்து அவர்கள் இவ்வாறு நடுவீதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அரச தலைவர், பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாக மைனாகோகமவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 7 ஆவது நாளாகவும் தொடர்கிறமை குறிப்பிடத்தக்கது.


No comments: