மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த உதயகுமார் உதயகாந்த் மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குட்பட்ட சமாதான நீதவானாக மட்டக்களப்பு நீதவான் நீதி மன்றில் சத்தியபிரமாணம் செய்துள்ளார்.
இவர் மட்டக்களப்பு கல்லடி - உப்போடை விவேகானந்தா கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், கொழும்பு - மாதம்பிட்டி புனித அந்தோனியார் வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரக் கல்வியையும், கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தில் தனது உயர்தரக் கல்வியையும் கற்று குறித்த பாடசாலைகளின் பழைய மாணவருமாவார்.
இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சமூக நல அமைப்புகளில் ஸ்தாபக தலைவராகவும், செயலாளராகவும், ஆலேசகராகவும் அங்கத்துவம் வகித்து சமூக பணியாற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த சமூக சேவையாளராக திகழ்ந்து வருகின்றார்.
இவர் மட்டக்களப்பு, கல்லடி உப்போடையைச் சேர்ந்த திரு.திருமதி உதயகுமார் உதயரஜனி தம்பதியினரின் புதல்வருமாவார்.
No comments: