News Just In

5/06/2022 02:28:00 PM

மட்டக்களப்பு மாவட்டம் முடங்கியது!




அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (6) நாடளாவ ரீதியாக ஹர்த்தால் மற்றும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

நாட்டிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து முன்னெடுத்துள்ள இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஒத்துழைப்புக்கள் கிடைத்துள்ளன.

அந்தவகையில், இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை ஆகிய பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன், அரச பாடசாலைகள், அலுவலகங்கள் போன்றவைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.


No comments: