பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றுள்ளது.பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தது.
அஜித் ராஜபஷ மற்றும் இம்தியாஸ் ரோகினி கவிரத்ன ஆகியோரின் பெயர்களே இவ்வாறு முன்மொழியப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் அஜித் ராஜபஷவிற்கு 109 வாக்குகளும் ரோகினி கவிரத்னவிற்கு 78 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் 23 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
No comments: