மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
காலி முகத்திடல் போராட்டத்தின் மீது கடந்த மே 9ஆம் திகதியன்று நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையில் இடையூறுகள் விளைவிக்கப்படுவதை தடுப்பதற்காகவே இந்த இடமாற்ற பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
No comments: