15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கோவில் பூசகர் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்நிலைய பிரிவிற்குட்பட்ட பகுதியில், வசிக்கும் சிறுமியின் தந்தை 26.05.2022 அன்று வழங்கிய முறைப்பாட்டிற்கமைய, சேனைக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய பிரதான சந்தேக நபரான கோவில் பூசாரியும் அவரது தாயும் கைதாகினர்.
கடந்த 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றில் குறித்த இரு சந்தேக நபர்களும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சந்தேக நபரான கோவில் பூசாரியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும், இச்செயலுக்கு உடந்தையான பூசாரியின் தாயை 5 இலட்சம் ரூபா பிணையில் செல்லுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் தாய் வெளிநாடு ஒன்றிற்கு பணிப்பெண்ணாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்றுள்ள நிலையில், தந்தையார் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்காக வழக்கமாக சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் தனிமையில் இருந்த சிறுமியின் நிலைமையை பயன்படுத்தி, காதல் வலையில் வீழ்த்தி சந்தேக நபரான பூசாரி இச்செயலை புரிந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
No comments: