சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று புதிய அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை பதவிகள் சம்பந்தமான தனது அதிருப்தியை வெளியிடும் வகையில் பிரதமர் அதில் கலந்துக்கொள்ளவில்லை என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
குறிப்பாக சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு அமைச்சு பதவிகள் கிடைக்காததே பிரதமரின் அதிருப்திக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக பிரதமர், புதிய அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில், புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து சிறிது நேரத்தில் அமைச்சரவை உறுப்பினர்களை அலரி மாளிகைக்கு பிரதமர் அழைத்துள்ளார்.
இதன் போது அரசாங்கத்தின் அடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக பேசப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
No comments: