கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நிதி அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்து மட்டக்களப்பு நகரில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி என்ற பெயரில் குறித்த பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ள இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு வாழ்த்துகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பதாகை தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: