News Just In

4/01/2022 12:51:00 PM

ஜனாதிபதி வீட்டின் முன்பாக போராட்டம் – கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு!


நுகேகொட – மிரிஹான பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பொலிஸ் பேருந்து ஒன்றும், ஜீப் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும், 2 டிராஃபிக் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இராணுவ பேருந்து ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: