மட்டக்களப்பு - ஆரையம்பதியில் தனியார் பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று, மட்டக்களப்பில் இருந்து களுவாஞ்சிக்குடியை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும், களுவாஞ்சிக்குடியில் இருந்து மட்டக்களப்பை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த 4 பேரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
No comments: