News Just In

3/28/2022 06:47:00 PM

அதிஉச்சத்தை எட்டியுள்ள தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துச் செல்கின்றது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூபா 185,000 ஆக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை சுமார் 170,000 ரூபாவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், சந்தையில் தங்கத்துக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: