நாட்டில் பத்து மணித்தியாலங்கள் வரை மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி பத்து மணித்தியாலங்கள் வரை மின் வெட்டை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இப்போது எங்களிடம் தேவையான எண்ணெய் இருப்பு உள்ளது. அடுத்த சில வாரங்களில் தென் மாகாணத்தில் பல மணிநேர மின்வெட்டு குறையும் வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: