உக்ரைனில் ரொக்கெட் ஒன்று பறந்து வந்து தாக்குவதைப் படம் பிடித்த ரஷ்ய உளவாளி என சந்தேகப்படும் ஒருவரை உள்ளூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் அந்த மாகாண கவர்னர் மேக்சிம் கோசிட்ஸ்கி தெரிவிக்கையில்,
“பிடிபட்ட நபர், ரஷ்ய ரொக்கெட் தாக்குதல் இலக்கை படம் பிடித்துள்ளார். அத்துடன், இந்த பிராந்தியத்தில் உள்ள சோதனைச் சாவடிகளையும் அவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
இந்தப் படங்களை அவர் ரஷ்ய தொலைபேசி எண்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்” என தெரிவித்துள்ளார். அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: