உக்ரைன் மீது ரஷ்யா 32-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது தொடர்ந்து 31வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை சுற்றி வளைக்க முயற்சித்து வருகிறது.
இதன்போது உக்ரைனில் ரஷ்ய படைப்பிரிவின் தளபதி ஒருவர் தனது சொந்த படையினரால் டாங்கியால் இடித்து கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய இராணுவத்தில் 37-வது மோட்டார் ரைபிள் படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் யூரி மெட்வடேவ் (Colonel Yuri Medvedev), அவரது பிரிவில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், கோபமடைந்த அவரது படையினரால் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு தாக்கப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
No comments: