இலங்கையில் எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு நிவாரணத் தொகை ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இன்றைய தினம் (28-03-2022) இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே ((Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குடும்பமொன்றுக்கு 5 ஆயிரம் ரூபா எனும் அடிப்படையில் நிவாரணத் தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களுக்கு இந்த நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், குறைந்த வருமானம் பெறும் 3.1 மில்லியன் மக்களுக்கு குறித்த நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments: