ஒஹிய இதல்கஸ்ஹின்ன தொடருந்து நிலையங்களுக்கு இடையில் உள்ள சுரங்கத்துக்கு அருகில், நேற்று (03) தம்பதிகளான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் தொடருந்தில் இருந்து வீழ்ந்து பலத்த காயமடைந்த நிலையில், தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தம்பதியினர், கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த தொடருந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, மேற்படி சுரங்கத்துக்கு அருகில் முதலில் யுவதி தவறி வீழ்ந்துள்ளார்.
இதனையடுத்து, அவரை காப்பாற்ற முயன்றுவதற்காக, பயணித்துக்கொண்டிருந்த தொடருந்திலிருந்து பாய்ந்த இளைஞரும் காயமடைந்துள்ளார் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரான்ஸைச் சேர்ந்த இளம் தம்பதியினரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தொடருந்திலிருந்து வீழ்ந்து காயமடைந்த தம்பதியினர் அதே தொடருந்தில் ஹப்புத்தளைக்கு கொண்டுவரப்பட்டு, நோயாளர் காவு வண்டி மூலம் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடருந்தின் கதவு பகுதியில் நின்றவாறு, மேற்படி யுவதி செல்ஃபி எடுக்க முயன்றபோது, தவறி விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பில் ஹப்புத்தளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments: