மட்டக்களப்பு - கல்லடியிலுள்ள சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக சற்று முன்னர் EP-BCC 9374 எனும் இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கல்லடி உப்போடை பிள்ளையார் கோவில் வீதியிலிருந்து பிரதான வீதியை கடந்து செல்லமுற்பட்ட முச்சக்கரவண்டி மீது மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த பிரதான வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிளானது மோதுண்டத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருக்கும் அத்தோடு முச்சக்கரவண்டியினை ஓட்டி வந்தவருக்கும் சிறிதளவில் காயங்கள் ஏற்பட்டதோடு இரு வாகனங்களுக்கும் சிறிதளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
No comments: